Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இவங்கா ட்ரம்பை வரவேற்கத் தயாராகிவரும் ஜேர்மன் தலைநகர்

In ஐரோப்பா
Updated: 11:54 GMT, Apr 25, 2017 | Published: 09:34 GMT, Apr 25, 2017 |
0 Comments
1232
icon_com
This post was written by : Risha

பெண்கள் உச்சி மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக ஜேர்மனிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்யும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதல்வி இவங்கா ட்ரம்பை வரவேற்பதற்கு பெர்லின் மக்கள் தயாராகி வருகின்றனர்.

ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கலின் அழைப்பின் பேரில், பெண்களுக்கு ஊக்கமளிப்பதன் மூலம் பெண்களின் தொழில் முனைவை அதிகரிக்கலாம் எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் வகையிலேயே இவரது விஜயம் அமையவுள்ளது.

உச்சிமாநாட்டிற்கு முன்னர் இவங்கா இன்றைய தினம் ஜேர்மன் அதிபர், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகாட் மற்றும் கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் ஆகியோருடன் குழு விவாதமொன்றிலும் ஈடுபடவுள்ளார்.

அதேவேளை, ஐரோப்பாவில் கொலை செய்யப்பட்ட யூதர்களுக்கான நினைவகத்தையும் இவங்கா பார்வையிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg