Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சுதந்திர கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை!

In இலங்கை
Updated: 10:51 GMT, Apr 25, 2017 | Published: 10:13 GMT, Apr 25, 2017 |
0 Comments
1061
icon_com
This post was written by : Surenth
May Day

கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்துகொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மே தினக் கூட்டம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சகல உறுப்பினர்களுக்கு எதிராகவும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இம்முறை சுதந்திரக் கட்சியின் சார்பில் இரண்டு மே தினக் கூட்டங்களை நடத்தவில்லை. சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கண்டி கட்டம்பே மைதானத்தில் மாத்திரமே நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மே தினக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட்ட கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு கொள்ள வேண்டியது கட்டாயம். அண்மையில் நடத்தப்பட்ட கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது” என துமிந்த திஸாநாயக்க கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg