Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யூரோவின் பெறுமதி ஐந்து மாதங்களில் மீண்டும் அதிகரிப்பு

In வணிகம்
Updated: 10:34 GMT, Apr 25, 2017 | Published: 09:59 GMT, Apr 25, 2017 |
0 Comments
1149
This post was written by : Elakkiya

ஆசிய வர்த்தகத்தில் அமெரிக்க டொலர்களிலும் பார்க்க யூரோவின் பெறுமதி ஐந்து மாதங்களின் பின்னர் மீண்டும் அதிகரிப்பை காட்டியுள்ளது.

டோக்கியோ பங்குச்சந்தை வர்த்தகத்தில் நேற்று (திங்கட்கிழமை) யூரோ நாணயம் ஒன்றின் பெறுமதி 1.0937 டொலர்களாக 2 சதவீத அதிகரிப்பை காட்டியதாக கூறப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதத்தின் பின்னர் யூரோவின் பெறுமதி இம்மாதமே அதிகரிப்பை காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவுகளை தொடர்ந்தே இவ்வாறு அதிகரிப்பை காட்டியுள்ளது.

முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவுகளின் பிரகாரம் மிதமான வலதுசாரியான இமானுவல் மக்ரோன் 23.7சதவீத வாக்குகளையும், அதிதீவிர வலதுசாரியின் தலைவர் மரைன் லு பென் 21.7சதவீத வாக்குகளையும் பெற்று தெரிவாகி உள்ளதோடு, இவர்கள் இருவரும் எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிக்கட்ட தேர்தலை சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg