Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வஜன வாக்கெடுப்பிற்கு அரசு தயாராகிறது : ராஜித

In இலங்கை
Updated: 11:55 GMT, Apr 25, 2017 | Published: 11:05 GMT, Apr 25, 2017 |
0 Comments
1239
This post was written by : Ravivarman

நல்லாட்சி அரசாங்கம் எதிர்கொள்ளவிருக்கும் முதலாவது தேர்தலானது ஓர்  சர்வஜன வாக்கெடுப்பாகவே அமையும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசியல் சாசனம் குறித்த யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும்.

அத்துடன் அனைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையும், அனைத்து மாகாணசபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது” என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg