Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கழிவு முகாமைத்துவம்: நிறுவனங்கள் தயாரித்துள்ள திட்டங்களை கோருகிறார் ஜனாதிபதி

In இலங்கை
Updated: 11:53 GMT, Apr 25, 2017 | Published: 10:59 GMT, Apr 25, 2017 |
0 Comments
1078
icon_com
This post was written by : Surenth
President

கழிவு முகாமைத்துவம் சம்பந்தமாக உள்ளூராட்சி நிறுவனங்கள் தயாரித்துள்ள திட்டங்களை சமர்ப்பிக்குமாறும் அனைத்து மாகாண உதவி ஆணையாளர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துவது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

கடந்த ஐந்து வருட காலப்பகுதியில், கழிவு முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற அதிகாரிகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது, கழிவு முகாமைத்துவம் தொடர்பில் கொழும்பு மாநகரசபை எதிர்வரும் காலங்களில் பின்பற்றவுள்ள முறைமைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் குப்பைமேடுகள் உருவாவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சஜித் பிரேமதாச, பைசர் முஸ்தபா, சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg