Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை மீறி செயற்பட்டார்: பிரதமர் குற்றச்சாட்டு

In இலங்கை
Updated: 12:10 GMT, Apr 25, 2017 | Published: 11:17 GMT, Apr 25, 2017 |
0 Comments
1057
icon_com
This post was written by : Surenth

கடந்த ஆட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தை மீறி செயற்பட்டதாகவும் அதன் விளைவாகவே நாடு தற்போது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் இதன் காரணமாகவே நாட்டில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்றத்தை மாற்றியமைத்து அதன் தரத்தை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg