Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அரசியல் அதிகாரம் ஆசிரியர்களை பழிவாங்குகிறது: தமிழாசிரியர் சங்கம்

In இலங்கை
Updated: 12:03 GMT, Apr 25, 2017 | Published: 11:10 GMT, Apr 25, 2017 |
0 Comments
1102
icon_com
This post was written by : Elakkiya
35

கல்வியாளர்களை அரசியல் அதிகாரத்தால் பழிவாங்க நினைப்பது அநாகரிகமானது என கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் போன்றோரை அரசியல் அதிகாரத்தால் பழிவாங்க நினைப்பது அநாகரீகம். இவ்வாறான ஒரு நிலைப்பாடு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு ஏற்பட்டிருப்பதை நாம் புறந்தள்ளி விட முடியாது.

அதுமட்டுமல்ல குறித்த அதிகாரியைப் பழிவாங்குவதற்காக மாகாணத்தின் அதியுயர் சபையான மாகாண சபையை பயன்படுத்துவது அடிமட்ட முட்டாள்தனம். மாகாண சபையில் மாகாண மக்களின் அபிவிருத்தி, பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில்  விவாதிக்க எத்தனையோ விடயங்கள் நிறைந்துள்ளன. அரசியல்வாதிகளான தங்களை கல்வி தொடர்பான நிகழ்வுகளுக்கு அழைக்கவில்லை என்பதற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கல்வியை முடக்க நினைப்பது முழு முட்டாள்தனமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை காணாமலாக்கப்பட்டவர்கள், காரணமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், காணிகளை இழந்தோர், கல்வி கற்று தெருவில் போராட்டம் நடத்தும் பட்டதாரிகள், பிரதேசத்தின் வறிய மக்களின் அபிவிருத்தி என நாட்டில் விவாதிக்க வேண்டிய எத்தனையோ பல விடயங்கள் இருக்கின்றபோது அவற்றையெல்லாம் விட்டு அடிபணியாத கல்வியாளர்களை பழிவாங்க நினைப்பது அநாகரிகமானது என்பதுடன் தமிழ் சமூகத்திற்கு இழைக்கும் அநீதியாகும் என்றும் கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg