Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதியின் சம்பூர் விஜயம் குறித்து கலந்துரையாடல்

In இலங்கை
Updated: 12:14 GMT, Apr 25, 2017 | Published: 11:21 GMT, Apr 25, 2017 |
0 Comments
1217
icon_com
This post was written by : Elakkiya
s12

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சம்பூர் விஜயம் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டபாயுதபாணி, பிரதம செயலாளர் உள்ளிட்டவர்களுடன் முப்படை தளபதிகள், உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்வரும் மே மாதம் ஜனாதிபதி மைத்திரி சம்பூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த விஜயத்தின்போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள சம்பூர் வைத்தியசாலை மற்றும் லங்கா பட்டண பாலம் ஆகியன திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கலாசார மண்டபம் ஒன்றும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg