Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கொழும்பிலிருந்து வெளியேறுபவர்கள் குப்பை பொதியையும் கொண்டு செல்ல நேரிடும்: முஜிபுர் ரஹ்மான்

In இலங்கை
Updated: 12:30 GMT, Apr 25, 2017 | Published: 11:47 GMT, Apr 25, 2017 |
0 Comments
1211
icon_com
This post was written by : Ravivarman
Mujeebur-Rahman

கொழும்பில் குவியும் குப்பைகளை அகற்றுவதற்கு எதிர்ப்புகள் அதிகரித்துச் செல்வதால் கொழும்புக்கு நாளாந்தம் வந்து செல்லும் வெளிப்பிரதேசத்தவர்கள் இங்கு வேலைகளை முடித்துவிட்டு செல்லும்போது குப்பை பொதியொன்றையும் எடுத்துச்செல்ல நேரிடும் என கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மீதொட்டமுல்ல பிரதேசத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த அவர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொழும்பில் நாளாந்தம் 750 தொன் குப்பை சேகரிக்கப்படுகின்றது. இதில் கொழும்பு மக்களின் குப்பைகள் 250 தொன் என தெரிவித்த அவர், அதில் 500 தொன் குப்பைகள் வெளிப் பிரதேசத்தவர்களினதாகும். எனவே இந்த குப்பை பிரச்சினை கொழும்பு மக்களின் பிரச்சினையல்ல, நாட்டின் தேசிய பிரச்சினையாகும்.

மீதொட்டமுல்ல விவகாரத்தில் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு மீண்டும் இவ்வாறானதொரு அனர்த்தத்தை தவிர்ப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குப்பைகளை அகற்றுவதற்கு அவர்கள் எதிர்ப்பு வெளியிடுவதை போல் கொழும்பு நகர எல்லைக்குள் வெளிப்பிரதேசத்தவர்கள் குப்பை கொட்ட முடியாது என கொழும்பு வாழ் மக்கள் வீதியில் இறங்கினால் நிலைமை மோசமடையும்.

எனவே மனிதாபிமான ரீதியில் இவ்விடயத்தை பார்க்க வேண்டும். அப்போதுதான் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியும்” என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg