Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: பிரான்ஸ் ஜனாதிபதி

In ஐரோப்பா
Updated: 12:28 GMT, Apr 25, 2017 | Published: 11:38 GMT, Apr 25, 2017 |
0 Comments
1233
icon_com
This post was written by : Risha
holl

தீவிரவாதத்திற்கு எதிரான நீண்டகால மற்றும் கடின போராட்டத்திற்கு அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைய வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்ட் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரான்சின் பரிஸ் நகரில் முக்கிய கடைத்தெருவான பரிஸ் சோம்ப்ஸ் எலிசேயில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரான்ஸின் தைரியமான மகன்களில் ஒருவரை நாடு மீண்டும் இழந்துள்ளது. அதேவேளை, மீண்டும் ஒருமுறை குடியரசு தனது மிக மதிப்புமிக்க பாதுகாவலர்களில் ஒருவரை இழந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் அதிகாரிக்கான அஞ்சலி நிகழ்வில், பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர்களான எம்மானுவேல் மக்ரோன் மற்றும் மரைன் லி பென் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில், அதில் வெற்றிபெற்ற இரு வேட்பாளர்களும் ஒன்றாக பங்கேற்கும் முதல் பொது நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg