Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கிழக்கின் விளையாட்டு வீர வீராங்கனைகளும் இந்த நாட்டின் மைந்தர்களே: கிழக்கு முதலமைச்சர்

In இலங்கை
Published: 14:05 GMT, Apr 25, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Ravivarman
spo01

கிழக்கு மாகாணத்தில் திறமையான விளையாட்டு வீரர்கள் இருந்த போதிலும் வளப்பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக பலருடைய திறமைகள் மழுங்கடிக்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

தேசிய ரீதியில் திறமைகளை வெளிப்படுத்திய கிழக்கு மாகாண வீர வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் இன்றையதினம் (செவ்வாய்க்கிழமை) பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைக் கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு முதலமைச்சர்,

“ஏற்கனவே யுத்தம் மற்றும் சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கு முன்னுரிமையளிக்காமல் தொடர்ச்சியாக முன்னணியிலுள்ள மாகாணங்களுக்கே வளங்கள் வழங்கப்படுவதினூடாக கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுகின்றது.

இதுவரை கிழக்கு மாகாணத்தில் தேசிய ரீதியிலான விளையாட்டு மைதானமொன்று இல்லாமை விளையாட்டுத்துறையில் பிரகாசிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதுடன் எதிர்கால சந்ததியினருக்கு இதுபாரிய இழப்பாகும்.

அத்துடன் சகல வசதிகளுடனும் கூடிய விளையாட்டரங்கொன்று கிழக்கில் உருவாக்கப்படுவது அத்தியவசியமானது அதன் மூலம் பல ஆற்றல் உள்ள இளைஞர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை கிழக்கிலேயே பெற்றுக் கொள்ள முடியும் என்பதை சுட்டிக்காட்டுகின்றேன்.

மேலும் வறுமை காரணமாக பல திறமை வாய்ந்த வீர வீராங்கனைகள் விளையாட்டுத் துறையினை இடைநடுவில் கைவிடும் துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது” என கிழக்கு மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spo03 spo 02

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg