Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிவனொளிபாதமலைக்கு செல்லும் இந்து பக்தர்களுக்கு அச்சுறுத்தல்: ஜனாதிபதிக்கு கடிதம்

In இலங்கை
Published: 14:40 GMT, Apr 25, 2017 |
0 Comments
2033
icon_com
This post was written by : Ravivarman
ok siva

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற இந்து பக்தர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர குருக்கள் தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) எமது பிராந்திய நிருபர் அவரிடம் கேட்டபோது,
“யாழ்பாணத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற இந்து பக்தர்களுக்கு, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவொன்றால் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை மலை உச்சியில் வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நந்திக் கொடியை ஏந்த வேண்டாம் என்றும், சிவனுக்குரிய கோஷங்களை எழுப்ப வேண்டாம் என்றும் அவர்கள் எச்சரித்திருந்தார்கள். இந்த விடயத்தில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொண்டது கவலையளிக்கின்றது.

இது தொடர்பாக முழுமையானதொரு விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து இலங்கை மலையக இந்துகுருமார் ஒன்றியம் ஜனாதிபதி, பிரதமர், இந்துசமய விவகார அமைச்சர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பவுள்ளது” என சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர குருக்கள் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg