Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:54 GMT, Apr 25, 2017 | Published: 16:09 GMT, Apr 25, 2017 |
0 Comments
1259
This post was written by : Sivaguru Siva
_95776806_gettyimages-672658382

கடந்த 20 ஆந்திகதி பரிஸின் சாம்செலிசே வீதியில் பயங்கரவாதி ஒருவரினால் சுட்டுக்கொல்லபட்ட பிரெஞ்சுக்காவற்துறை அதிகாரி சேவியர் யுஜிலேக்கு பிரான்ஸின் அதியுச்ச மதிப்புக்குரிய லீஜன் து ஒனர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற தேசிய நினைவுகூரல் நிகழ்வில் மரணமடைந்த அதிகாரிக்கு பிரெஞ்சு  ஜனாதிபதி  பிரான்சுவா ஹொலண்ட் இந்தவிருதை வழங்கினார்.

இந்த நிகழ்வில் பிரான்ஸ்  ஜனாதிபதி  தேர்தலில்  இறுதிச்சுற்றுக்குரிய  வேட்பாளர்களான இமானுவேல் மக்ரோன் மற்றும் மரைன் லெ பென் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

nintchdbpict000319281211

பேர்லினில் இடம்பெற்ற ஜி 20 பெண்கள் உச்சிமாநாட்டில் இன்று கலந்து கொண்ட அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ரம்பின் புதல்வி இவங்கா தனது தந்தையாரின் கொள்கைகளை நியாயப்படுத்தியுள்ளார்

ஜேர்மன் சான்சலர் அங்கலா மேர்க்கல் மற்றும் அனைத்துலக நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸரின் லகார்த் ஆகியோர் உட்பட்ட பிரபல பெண்மணிகளுடன் இவங்கா இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

ஜேர்மனிய அதிபர்   அங்கலா மேர்க்கல் தனது அண்மைய அமெரிக்கப பயணத்தின்போது இந்த நிகழ்வுக்கு வருமாறு இவங்கா ட்ரம்புக்கு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

_95782899_thai

தாய்லாந்திலுள்ள ஒருவர் தனது குழந்தையை படுகொலை செய்த சம்பவத்தை பேஸ்புக் எனப்படும் முகநூல் சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குருரச்சம்பவத்தை நேரலையாக ஒளிபரப்பிய 21 வயதான மேற்படி நபர் பின்னர் தற்கொலை செய்துள்ளார்.

தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதங்களையடுத்தே  இவர் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரியவருகிறது.

அமெரிக்காவிலும் ஈஸ்டர் தினத்தன்று ஒருவர் முகநூல் சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒருவரை சுட்டுக்கொன்ற பின்னர் காவற்துறையின் தேடுதல்வேட்டையின் போது அவர் தற்கொலை செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

2014875568549734_20

பிரான்ஸ்  ஜனாதிபதி  வேட்பாளர் இமானுவேல் மக்ரோனின் பரப்புரை இணையத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை ரஸ்ய இணைய ஊடுருவிகள் ஊடுருவ முயற்சிப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கஅரசதலைவர் தேர்தல்காலத்தில் செய்ததைப் போலவே இந்த நகர்வுகள் செய்யப்படுவதாக கருதப்படும் போதிலும் ரஸ்யா இதனை மறுத்துள்ளது

_95774377_cae785aa-d731-465b-961a-cad2733ceebb

தனது ராணுவ கட்டமைப்பு நிறுவப்பட்ட 85வது ஆண்டு நினைவை இன்று வட கொரியா கொண்டாடிய நிலையில் அமெரிக்காவின் நீர்மூழ்கிக்கப்பல் தென்கொரியாவில் தற்பொது தரித்துநிற்கிறது.

வட கொரியா புதிய ஏவுகணை அல்லது அணு ஆயுத சோதனை நடத்தலாம் எதிர்பார்கப்படும் நிலையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தென்கொரியாவுக்கு சென்றமை குறிப்பிடத்த்கது.

kaveri_3158188f

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்த 6 வயது சிறுமியை காப்பாற்றுவற்கு 50 மணிநேரத்துக்கும் மேல் மீட்புப்போராட்டம் இடம்பெற்றபோதிலும் அந்தச்சிறுமி மரணமடைந்தமை பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை காவேரி என்ற இந்த சிறுமி ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து 20 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டபின்னர்  500 பேர் கொண்ட மீட்புப் படை சுமார் 50 மணிநேரத்துக்கும் மேல் போராடி குழந்தையைக் காப்பாற்ற கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆயினும் இறுதியில் அந்த முயற்சி  தோல்வியடைந்தது சிறுமி காவேரி இறந்ததாக இன்று அறிவிக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg