Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீதொட்டமுல்ல அனர்த்தத்தின் எதிரொலியாக நாடாளுமன்றில் விசேட அமர்வு

In இலங்கை
Updated: 04:33 GMT, Apr 26, 2017 | Published: 03:14 GMT, Apr 26, 2017 |
0 Comments
1260
This post was written by : Risha

மீதொட்டமுல்ல அனர்த்தத்தை தொடர்ந்து எழுந்துள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு நாடாளுமன்றத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) விசேட அமர்வொன்று இடம்பெறவுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு அமைய விசேட அமர்வு நடைபெறவுள்ளது.

அதேவேளை, குப்பை முகாமைத்துவம் தொடர்பாக வெளியிடப்படவேண்டிய சில வர்த்தமானி அறிவித்தல்களுக்கான அனுமதி இந்த அமர்வில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை அகற்றும் பணியை அத்தியாவசிய சேவையாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுதினம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, அன்றையதினமே விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விசேட அமர்வில் விவாதிக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் தலைமையில் இன்று காலை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg