Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

போராட்டங்களினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்க விசேட செயலணி

In இலங்கை
Published: 03:37 GMT, Apr 26, 2017 |
0 Comments
1204
icon_com
This post was written by : Risha
strik

திடீர் வேலைநிறுத்தப் போராட்டங்களினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையில் விசேட இராணுவ செயலணியொன்று உருவாக்கப்படவுள்ளது.

திருகோணமலை எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி தொடர்பில் இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள உடன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் முன்னெடுத்த பணிநிறுத்த போராட்டத்தின் எதிரொலியாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னறிவித்தலின்றி பல்வேறு தரப்பினர்களினாலும் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில், இவ்வாறான போராட்டங்களால் ஸ்தம்பிதமடையும் சேவைகளை, குறித்த செயலணியை கொண்டு தடையின்றி முன்னெடுத்துச் செல்லும் வகையிலேயே இந்த இராணுவ செயலணி அமைக்கப்படவுள்ளது.

பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இராணுவத்தினரையும், ஓய்வுபெற்ற அதிகாரிகளையும் ஒன்றிணைத்து இந்த செயலணியை உருவாக்க அரசு ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg