Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கி வைப்பு

In இலங்கை
Updated: 05:51 GMT, Apr 26, 2017 | Published: 04:08 GMT, Apr 26, 2017 |
0 Comments
1147
icon_com
This post was written by : Risha
house

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக, 65 குடும்பங்களுக்கான வீடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வின் போதே குறித்த வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் வீடுகளை இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி அரசின் திட்டத்தின் முதற்கட்டமாக 30 வீடுகள் கடந்த வாரம் வழங்கிவைக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்காக அரசாங்கம் 3 ஆயிரத்து 920 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வீட்டுரிமையாளர்களுக்கு வீட்டுத் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக வீட்டுரிமையாளர் ஒருவருக்கு தலா இரண்டரை இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இழந்த வீடுகளுக்கான மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், மதிப்பீட்டு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் பெறுமதிகூடிய வீடுகளுக்கு மேலதிக நிதியை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg