Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேற்கிந்திய தீவுகளை துரத்தும் துரதிஷ்டம்: முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி

In கிாிக்கட்
Updated: 04:58 GMT, Apr 26, 2017 | Published: 04:56 GMT, Apr 26, 2017 |
0 Comments
1191
This post was written by : Anojkiyan
yas

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

கிங்ஸ்டனில் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, கடும் நெருக்கடிக்கு மத்தியில் 286 ஓட்டங்களை குவித்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக சேஸ் 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் மொஹமட் ஆமிர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 407 ஓட்டங்களை குவித்தது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழக்காது 99 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் கேப்ரில் மற்றும் ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 121 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, யாசிர் ஷாவின் சுழலில் சிக்கி 152 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 32 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை, 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி எட்டியது.

இரண்டாவது இன்னிங்ஸிற்காக பவல் 49 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் யாசிர் ஷா 6 விக்கெட்டுகளை சாய்த்ததோடு போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg