Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

In இந்தியா
Published: 04:45 GMT, Apr 26, 2017 |
0 Comments
1211
icon_com
This post was written by : Shailu

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன் 26 பேர் படுகாயடைந்துள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை)  ஜீப் வண்டி ஒன்றும் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாக மாநில அரசு தெரிவித்துள்ள அதேவேளை, படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜீப் வண்டியில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் வீதி விபத்துக்கள் காரணமாக நாளாந்தம் 400 பேர் வரை உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg