Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமரை இன்று சந்திக்கிறார் ரணில்

In இலங்கை
Updated: 10:26 GMT, Apr 26, 2017 | Published: 04:51 GMT, Apr 26, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Risha

இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இலங்கையில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் வெசாக் தினத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், அரசியல் விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையிலும் பிரதமரின் இவ்விஜயம் அமைந்துள்ளது.

இந்தியாவிற்கு ஐந்து நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில், நேற்று இரவு புதுடெல்லியை சென்றடைந்தார்.

இந்த விஜயத்தின் போது சர்ச்சைக்குரிய எட்கா ஒப்பந்தம் தொடர்பில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த விஜயத்தில் பிரதமருடன், அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க, அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, மலிக் சமரவிக்ரம ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg