Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தினகரனின் கைது தொடர்பில் அரசியல் தலைவர்கள் கருத்து

In இந்தியா
Updated: 05:43 GMT, Apr 26, 2017 | Published: 05:36 GMT, Apr 26, 2017 |
0 Comments
1213
icon_com
This post was written by : Shailu
Dinakaran

தினகரன் கைதுசெய்யப்பட்ட விடயத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

‘இரட்டை இலை’ சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரன் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்யப்பட்டார். இது குறித்து பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில், தமிழிசை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “தமிழகத்திற்கே மிகப்பெரிய அவமானத்தை தேடித் தந்த தினகரன் மீது எடுப்பட்டுள்ள நடவடிக்கையானது, பா.ஜ.க-வின் பின்னணியில் இடம்பெற்றுள்ளது என்று கூறுவதை ஏற்க முடியாது. மாறாக யார் குற்றம் செய்தாலும் தண்டனை கிடைத்தே தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் கடைசி கட்டமாகவே தினகரனின் கைது இடம்பெற்றுள்ளது“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓ.பி.எஸ். அணியின் மூத்த தலைவரான பொன்னையன் குறிப்பிடுகையில், இரட்டை இலை சின்னத்தை பெற தவறான வழியை மேற்கொண்ட தினகரனின் செயற்பாடானது நாடே தூற்றும் வகையில் உள்ளதென தெரிவித்துள்ளார்

அத்தோடு, தினகரன் கைது மூலம் மோசமான முன்னுதாரணத்தை பா.ஜ.க மேற்கொண்டுள்ளதாகவும் இதில் திட்டமிட்ட சதி இடம்பெற்றுள்ளதகவும் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவது பா.ஜ.க.வின் கையிலேயே உள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg