Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.க-வின் இரு அணிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை

In இந்தியா
Updated: 09:53 GMT, Apr 26, 2017 | Published: 06:12 GMT, Apr 26, 2017 |
0 Comments
1246
This post was written by : Shailu

அ.தி.மு.க-வின் இரு அணிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று (புதன்கிழமை) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையில் ஓ.பி.எஸ் அணி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிகளிலிருந்து தலா 7 பேர் கொண்ட குழு பங்கேற்க உள்ளதாக கூறப்படுகின்றது.

அத்தோடு இன்றைய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எதிர்வரும் 28ஆம் திகதி இரு கட்சிகளின் இணைப்பு தொடர்பில் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அ.தி.மு.க கட்சியானது இரண்டாக பிரிந்தது. இதில் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அணியாகவும் பிரிந்தனர். எனினும் மீண்டும் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதில் அ.தி.மு.க.விலிருந்து சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க வேண்டும் எனவும், கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் பதாதைகளை அகற்ற வேண்டும் எனவும் ஓ.பி.எஸ் அணி சார்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில், அவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

அத்தோடு டி.டி.வி.தினகரனும் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg