Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தென் சீன கடற்பிராந்திய பதற்றம் குறித்து ASEAN மாநாட்டில்அவதானம்

In
Published: 08:58 GMT, Apr 26, 2017 |
0 Comments
1276
icon_com
This post was written by : Elakkiya

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டில் (ASEAN), தென்சீன கடற்பிராந்திய பதற்றங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்விவகாரம் குறித்து சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்களாக இந்தோனேஷியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் மணிலாவில் நடைபெறவுள்ள மாநாட்டில் தெற்காசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் சனிக்கிழமை மாநில தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். அதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை தென்கிழக்கு ஆசியாவின் பத்து நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து கலந்துரையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்போது பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள், வடகொரியாவின் அணுசக்தித் திட்டம், அதேபோன்று வர்த்தக பொருளாதார பங்களிப்புகள் ஆகியன குறித்து கலந்துரையாடப்படும் என்று கூறப்படுகின்றது.

ஆசியான் பிராந்தியமானது 626 மில்லியன் மக்களையும் 2.4 த்ரில்லியன் டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல ஆசியான் அமைப்பை தனி அமைப்பாகக் கருதினால் உலகின் எட்டாவது மிகப்பெரிய பொருளாதார அமைப்பாக காணப்படுகின்றது.

இந்த அமைப்பானது 50 ஆண்டுகளுக்கு முன்னர் பனிப்போர் மோதல்கள் மற்றும் கிளர்ச்சிகளுக்கு மத்தியில் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg