Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மலையக பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

In இலங்கை
Published: 06:13 GMT, Apr 26, 2017 |
0 Comments
1217
icon_com
This post was written by : Risha

பாடசாலை விடுமுறை நிறைவடைந்து கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் தவணையின் முதல் நாளான இன்று (புதன்கிழமை) மலையக பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், பாடசாலை சுற்றுச் சூழலை சுத்தம் செய்யும் நோக்குடன் இந்த விசேட சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது நுளம்புகள் பரவக்கூடிய வகையிலான இடங்கள் அழிக்கப்பட்டதுடன், புகை விசுறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. குறித்த சிரமதானப் பணிகளில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

முதலாம் தவணைக்கான விடுமுறை கடந்த 5ஆம் திகதி வழங்கப்பட்டிருந்த நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ், சிங்கள அரச பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

den den2

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg