Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வெப்பத்திலிருந்து மாணவர்களை பாதுகாக்குமாறு அறிவுறுத்தல்

In இலங்கை
Updated: 08:44 GMT, Apr 26, 2017 | Published: 08:41 GMT, Apr 26, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
kids_b

நாட்டில் தற்போது கடும் வெப்பமான காலநிலை நிலவி வருகின்ற நிலையில், அதிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவுறுத்தியுள்ளார்.

கல்வியமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கல்வியமைச்சர் இவ் அறிவித்தலை விடுத்துள்ளார்.

போதுமான அளவு நீரைப் பருகுதல், தொப்பிகளை அணிதல் மற்றும் வெளியில் செல்லும்போது குடைகளை பயன்படுத்துதல் போன்ற விடயங்களை மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

மேலும், பாடசாலை நீர்த்தாங்கிகளை நாளாந்தம் சுத்தப்படுத்துவதை பாடசாலை அதிபர்கள் உறுதிப்படுத்துவதோடு, மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, வெப்பமான காலநிலை சீராகும்வரை மாணவர்களை வெளிச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கல்வியமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தமிழ் சிங்கள அரச பாடசாலைகள் இன்றைய தினம் இரண்டாம் தவணைக்காக தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg