Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீதொட்டமுல்ல விசாரணைக்காக முன்னாள் நீதிபதி சந்திரதாச நியமனம்

In இலங்கை
Published: 08:56 GMT, Apr 26, 2017 |
0 Comments
1189
This post was written by : Varshini

கொலன்னாவ – மீதொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, முன்னாள் நீதிபதி சந்திரதாச நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று (புதன்கிழமை) இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் நீதிபதி தலைமையில் நடைபெறும் இவ் விசாரணை தொடர்பான அறிக்கையை விரைவில் ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி ஏற்பட்ட மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் 32 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர். மேலும், நூற்றிற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்ததோடு, 150இற்கும் அதிகமானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினார்.

சம்பவம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டிருந்த ஜப்பானிய நிபுணர் குழுவின் அறிக்கை, நேற்று முன்தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg