Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு: கடைசி வாதத்தை நிறைவு செய்தார் கனிமொழி

In இந்தியா
Updated: 10:58 GMT, Apr 26, 2017 | Published: 09:12 GMT, Apr 26, 2017 |
0 Comments
1267
icon_com
This post was written by : Shailu
Kanimozhi

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் இறுதி வாதம் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைந்துள்ளது.

குறித்த வழக்கு டெல்லி மத்திய புலனாய்வுத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஷைனி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது கனிமொழியின் வாதத்தைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி, “இரு தரப்பினரும் தங்கள் எழுத்துபூர்வமான வாதங்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

அத்தோடு, இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களின் விளக்கங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி கேட்கப்படும். அன்றைய தினமே வழக்கின் தீர்ப்புக்கான திகதியும் அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

சுமார் 6 ஆண்டுகளாக மத்திய புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 இலட்சம் கோடி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்தோடு கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.214 கோடி கைமாறியது குறித்தும் மத்திய புலனாய்வுத் துறையும், அமுலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg