Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அப்துல் கலாமின் நினைவிடத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

In இந்தியா
Updated: 11:40 GMT, Apr 26, 2017 | Published: 09:49 GMT, Apr 26, 2017 |
0 Comments
1154
icon_com
This post was written by : Shailu
modi

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஜூலை மாதம் திறந்து வைக்கவுள்ளார்.

அப்துல் கலாமின் நினைவு தினம் எதிர்வரும் ஜூலை மாதம் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, கலாமின் நினைவிடத்தை திறந்துவைக்கவுள்ளார்.

அன்றைய தினம் ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரையான புதிய சாலையை திறந்துவைப்பது மற்றும் தனுஷ்கோடிக்கு நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி இயற்கை எய்தினார். இவருக்கு அவரது சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் நினைவிடம் அமைக்கப்படுகிறது.

ரூ.50 கோடி செலவில் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் பேய்க்கரும்பு என்னும் இடத்தில் கட்டப்படும்  இந் நினைவிடத்தில், கலாமின் வாழ்க்கை வரலாற்று அருங்காட்சியகம், அறிவுசார் மையம், நூலகம், கலையரங்கம், உள்ளிட்டவை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg