Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

In இலங்கை
Published: 10:08 GMT, Apr 26, 2017 |
0 Comments
1207
icon_com
This post was written by : Risha

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அதன்படி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை வரைவதற்கு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவ்வாறு எடுத்தால் மட்டுமே ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் குறித்து தீர்மானிக்க முடியும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்த நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg