Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசிய பேட்மின்டன் சம்பியன்ஷிப்: முதல் சுற்றிலேயே சாய்னா வெளியேற்றம்

In விளையாட்டு
Updated: 12:03 GMT, Apr 26, 2017 | Published: 10:19 GMT, Apr 26, 2017 |
0 Comments
1298
This post was written by : Anojkiyan

சீனாவின் வாஹான் நகரில் நடைபெற்றுவரும் ஆசிய பேட்மின்டன் சம்பியன்ஷிப் கிண்ண தொடரின் பெண்களுக்கான முதல் சுற்று பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால் தோல்வியடைந்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் சாய்னா, ஜப்பானின் சயாகா சாடோவை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய சாய்னா, முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் பின் ஆக்ரோஷமாக விளையாடிய சாடோ, இரண்டாம் மற்றும் மூன்றாவது செட்களை 26-21, 18-21 என்ற கணக்கில் கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg