Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொடநாடு பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்

In இந்தியா
Updated: 13:41 GMT, Apr 26, 2017 | Published: 10:54 GMT, Apr 26, 2017 |
0 Comments
1499
icon_com
This post was written by : Shailu
Kodanaduestate

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, உயிரிழந்த காவலாளியின் கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய மர்ம நபர்கள் பயன்படுத்திய கை உறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை தேடும் பணிக்ள தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் முரளி ராம்பா தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, தேடும் பணி முன்னெக்கப்பட்டு வருகின்றது.

மேலும் காவலாளிகள் பணியிலிருந்த இடங்களில் இருந்தே கையடக்கத் தொலைபேசிகள் கண்டெக்கபட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி ஒருவர் இனம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதோடு, மற்றுமொரு காவலாளி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது பொருட்கொள்ளைக்காக இடம்பெற்றதா அல்லது அரசியல் உட்பூசல்களா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg