Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சூர்யாவுடன் மீண்டும் இணைகிறார் இயக்குநர் ஹரி

In சினிமா
Updated: 12:07 GMT, Apr 26, 2017 | Published: 10:41 GMT, Apr 26, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Vithushagan
201704261302234336_Directo-Hari-opens-about-his-next-project-with-suriya_SECVPF

சூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’ ஆகிய படங்களை எடுத்தவர் இயக்குநர் ஹரி. அதிலும், ‘சிங்கம்’ மூன்று பாகங்களைக் கடந்துவிட்டது. நான்காவது பாகமும் வெளியாகும் என இயக்குநர் ஹரி கூறியிருக்கிறார்.

இந்நிலையில் மறுபடியும் சூர்யாவை வைத்து, தான் படம் இயக்கப்போவதாக ஹரி தெரிவித்துள்ளார். ஆனால், அந்த படம் ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகம் இல்லை என்றும், புதிய கதையொன்றில் இருவரும் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது ஹரி  இருக்கிறார். இன்னும் மூன்று மாதங்களில் சாமி 2 படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது. இப்படத்தை முடித்த பிறகு சூர்யா படத்தின் வேலைகளைத் தொடங்கவிருக்கிறார் ஹரி.

சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கும் சூர்யா அதன்பிறகு, ஹரி இயக்கும் புதிய படத்தில் நடிப்பார்.

அதன்பின்னர் 5 அல்லது 6 வருடங்கள் கழித்து சிங்கம் படத்தின் 4ஆவது பாகம் வெளியாகும் என்று ஹரி முன்னதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg