Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மன்செஸ்டர் வைத்தியசாலையில் தீ விபத்து

In
Updated: 11:02 GMT, Apr 26, 2017 | Published: 10:44 GMT, Apr 26, 2017 |
0 Comments
1127
icon_com
This post was written by : elayathambi
C-VI7VpXYAAlaav

மன்செஸ்டரில் உள்ள ஐக்கிய ராச்சியத்தின் புற்று நோய் ஆராய்ச்சி நிலையமான கிறிஸ்டி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் இருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீ விபத்தை கட்டுப்படுத்தும் தீவிர பணியில் தீயணைப்புப் பிரிவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கட்டடப் பகுதியில் இருந்து பெருமளவிலான கரும் புகை வெளியேறி வருவதாக அப்பிரதேசத்தை அண்டியவர்கள் வெளியிட்டிருக்கும் சமூக வலைத் தளச் செய்திகளில் இடப்பட்டிருக்கும் புகைப் படங்களின் மூலம் அறிய முடிகிறது.

வைத்தியசாலையின் கூரைப்பகுதி முழுமையான தீக்கு  இலக்காகி இருப்பதாக நேரில் கண்ட சாட்சியாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நேரம் காலை 10.36 இற்கு தமக்கான அவசர அழைப்பு கிடைத்ததாக மன்செஸ்டர் தீயணைப்புப் பிரிவுப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஐந்து தீயணைப்பு இயந்திரங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக அவர்  தெரிவித்தார்.

தீ வைத்தியசாலையின் இயந்திர அறையில் இருந்து பரவ ஆரம்பித்ததாகத் தெரிய வருகிறது. இவ்விபத்து குறித்த முழுமையான மேலதிக விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை

pri_37684088
pri_376852521
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg