Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜாதவிற்கு தூதரக உதவி: பாகிஸ்தானிடம் அனுமதி கோரும் இந்தியா

In இந்தியா
Updated: 12:43 GMT, Apr 26, 2017 | Published: 11:56 GMT, Apr 26, 2017 |
0 Comments
1318
This post was written by : Shailu

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவிற்கு தூதரக உதவிகளை வழங்க வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கெளதம் பம்பாவாலே இன்று (புதன்கிழமை) பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் டெமினா ஜன்ஜூவாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த பம்பாவாலே “ஜாதவ் மீதான குற்றப்பத்திரிகையின் நகல் மற்றும் மரண தண்டனை தீர்ப்பின் நகலை வழங்குமாறும் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டார்.

அத்தோடு, ஜாதவுக்கு சர்வதேச சட்ட மனிதாபிமான அடிப்படையில் தூதரக உதவி வழங்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவிற்கு பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதனையடுத்து அவரை காப்பாற்றும் முயற்சிகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg