Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மர ஏற்றுமதிக்கு வரி விதித்துள்ள அமெரிக்காவின் திட்டம்: ஜிம் கார் அதிருப்தி

In கனடா
Updated: 12:40 GMT, Apr 26, 2017 | Published: 11:51 GMT, Apr 26, 2017 |
0 Comments
1097
This post was written by : Anojkiyan
justin trudeau jim carr kinder morgan pipeline

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரங்களுக்கு 20 சதவீத வரியினை புதிதாக அறிவித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையானது இரண்டு நாடுகளில் உள்ளவர்களையும் வெகுவாக பாதிக்கும் என இயற்கைவள அமைச்சர் ஜிம் கார் கூறியுள்ளார்.

கனடாவின் ஆயிரக்கணக்கான மர வியாபாரிகளை மட்டுமின்றி, அமெரிக்க பயனாளர்களையும் இது பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனால் அமெரிக்கர்கள் தமக்கு தேவையான மரங்களுக்காக அதிக விலையினை செலுத்த நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையேயான இந்த மர வணிகத்தில், முன்பும் இவ்வாறhன வரி விதிப்பு இடம்பெற்றிருந்த நிலையில், அது நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காணப்பட்டது.

ஆனால் இம்முறை விதிக்கப்பட்டுள்ள இவ் வரி திட்டத்தை மீள் பரீசிலனை செய்ய முடியும் என்பது சந்தேகத்திற்குரியதே என பொருளியல் வல்லுநர்களால் கூறப்படுகின்றது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg