Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஷரபோவாவுக்கு வைல்ட் கார்ட் வழங்கியமை குறித்து அதிருப்தி!

In டெனிஸ்
Updated: 12:44 GMT, Apr 26, 2017 | Published: 12:28 GMT, Apr 26, 2017 |
0 Comments
1108
icon_com
This post was written by : Anojkiyan
rob

15 மாதகால போட்டித் தடையிலிருந்து ‘வைல்ட் கார்ட்’ சலுகை மூலம் மீண்டும் களம் கணாவுள்ள ரஷ்யாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவாவுக்கு, வைல்ட் கார்ட் வழங்கியதில் நிறைய வீராங்கனைகளுக்கு அதிருப்தி உள்ளதாக இத்தாலியின் நட்சத்திர வீராங்கனையான ரொபர்ட்டா வின்சி கூறியுள்ளார்.

ஸ்டட்கார்ட் டென்னிஸ் தொடரில் இன்று (புதன்கிழமை) களமிறங்கவுள்ள ஷரபோவா, முதல் சுற்றில் இத்தாலியின் ரொபர்ட்டா வின்சியை எதிர்கொள்ளவுள்ளார்.

இதுகுறித்து வின்சி கூறுகையில், “ஷரபோவாவுக்கு, ‘வைல்ட் கார்ட்’ சலுகை வழங்கப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஊக்கமருந்து பயன்படுத்தி அதற்குரிய தண்டனையை அனுபவித்து இருக்கிறார்.

தடை காலத்திற்கு பிறகு அவர் மீண்டும் விளையாடலாம். ஆனால் எந்த வித ‘வைல்ட் கார்ட்’ உதவியும் இன்றி (அதாவது தகுதி சுற்றில் விளையாடி அதன் மூலம் பிரதான சுற்றுக்கு வர வேண்டும்) விளையாட வேண்டும்.

அநேகமாக 2 அல்லது 3 தொடர்களில் அவர் விளையாடினால் தரவரிசையில் 30 இடத்திற்குள் வந்து விடுவார். அவருக்கு வைல்ட் கார்ட் வழங்கியதில் நிறைய வீராங்கனைகளுக்கு அதிருப்தி இருக்கிறது” என கூறினார்.

இதற்கிடையே, பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் பிரதான சுற்றில் நேரடியாக விளையாடுவதற்குரிய வைல்ட் கார்ட் ஷரபோவாவுக்கு வழங்கப்படாது என்றும், அவர் தகுதி சுற்றில் விளையாடுவதற்கு வைல்ட் கார்ட் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg