Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஃபிங்கர் சிக்கன்

In
Published: 12:33 GMT, Apr 26, 2017 |
0 Comments
1239
This post was written by : Anojkiyan
ck072

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ
முட்டை – 1
தயிர் – 1 கப்
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மைதா – 1 கப்
பிரட் தூள் – 1 கப்
உப்பு – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
கேசரி கலர் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து 1 இஞ்ச் நீளமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் தயிர், இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும். அடுத்து அதில் சிக்கனை அந்த கலவையில் போட்டு பிரட்டி வைத்து, 3 மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு கிண்ணத்தில்

மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பவுடரை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். குளிர்சாதன பெட்டியில் இருந்து சிக்கனை எடுத்து, அதில் உள்ள தயிர் கலவையை முற்றிலும் வடித்து விடவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு வடிகட்டிய அந்த சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பின் பொரித்த சிக்கனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி பரிமாறவும். வேண்டுமென்றால் அதன் மேல் எலுமிச்சைபழச்சாற்றை பிளிந்தும் சாப்பிடலாம். இப்போது சுவையான ஃபிங்கர் சிக்கன் ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg