Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

யாழில் தந்தை செல்வாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு பரிசளிப்பு விழா

In இலங்கை
Published: 14:06 GMT, Apr 26, 2017 |
0 Comments
1100
icon_com
This post was written by : Vithushagan
IMG_1428

தந்தை செல்வாவின் நினைவு தின பரிசளிப்பு விழா அவரது புதல்வரான செ.சந்திரகாசன் தலைமையில் யாழில் நடைப்பெற்றது.

குறித்த நிகழ்வு தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) யாழ். மத்திய கல்லூரியின் தம்பர் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது தந்தை செல்வாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு பாடசாலை ரீதியில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நினைவுப்பரிசில்களை புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பேராயர் ஜெபநேசன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில், யாழ். மத்திய கல்லூரியின் அதிபர் எழில்வேந்தன் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

IMG_1477 IMG_1492

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg