Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 17:00 GMT, Apr 26, 2017 | Published: 16:00 GMT, Apr 26, 2017 |
0 Comments
1286
icon_com
This post was written by : Sivaguru Siva
_95790082_30a4ac37-b9f2-405e-85cc-13ebcc011e70

தென்கொரியாவில் அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுபயிற்சிகள் நிறுத்தப்படவேண்டுமென அமெரிக்காவிடம் சீனா கோரிக்கைவிடுத்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் உருவாகியுள்ள போர்ப்பதற்றத்தை தணிக்க இந்த அவசியமான நகர்வு தேவையெனவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

தென்கொரியாவில் ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறை கருவிகளை நிறுவிவரும் அமெரிக்கா  வடகொரிய எல்லைக்கு அண்மையாக இராணுவ பயிற்சி செய்துவரும் நிலையில்  சீனாவின் இந்தக் கோரிக்கை வந்துள்ளது.

Theresa-May-Jeremy-Corbyn-PMQs

எதிர்வரும் யூன் 8 ஆந் திகதி  பிரித்தானியாவில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இன்று   பிரதமர்  கேள்விநேரம் இடம்பெற்றது.

இதில் பிரதமர்   திரேசாமேயும் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமிகோர்பின் கடுமையான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.

அடுத்தவாரம் பிரித்தானிய நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

_95798417_mediaitem95798416

பிரான்சின் அமியன் பகுதியில் தொழிற்சாலை ஒன்று முடப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை சந்திக்கசென்ற ஜனாதிபதி  வேட்பாளர் இமானுவேல் மக்கரன் கேலிசெய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இமானுவேல் மக்கரனின் எதிர்வேட்பாளரான மரின் லெ பனுக்கு ஆதரவான தொழிலாளர்கள் இந்தசெய்கையை செய்தபோதும் திட்டமிட்டபடி தொழிலாளர்களுடனான சந்திப்பை மக்கரன் மேற்கொண்டுள்ளார்.

இமானுவேல் மக்கரன் அங்கு செல்வதற்கு முன்னர் மரின் லெ பனும் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

Ehsanullah-Ehsan-videograbjpg

பாகிஸ்தானில் செயற்படும் தலிபான் தலைவருக்கு இந்திய புலனாய்வு அமைப்பான றோ மற்றும் ஆப்கானிய புலனாய்வு அமைப்புகள் புகலிடம் அளித்து காத்து வருவதாக தடைசெய்யப்பட்ட ஜமாத்துல் அஹ்ரார் அமைப்பின் தளபதி குறிப்பிட்டுள்ளார்

ஜமாத்துல் அஹ்ரார் இயக்கத்தின் தளபதி இசானுல்லா இசானை பாகிஸ்தான் ராணுவம் கடந்த வாரம் கைது செய்தநிலையில் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அவரது காணொளி வாக்குமூலத்தில் இந்த குற்றச்சாட்ட முன்வைக்கபட்டுள்ளது.

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு இந்திய மற்றும் ஆப்பான் உளவு அமைப்புகள் தூண்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg