Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இமாலயத்தில் தொலைந்த பயணி 47 நாட்களின் பின் மீட்பு

In உலகம்
Updated: 17:00 GMT, Apr 26, 2017 | Published: 16:56 GMT, Apr 26, 2017 |
0 Comments
1207
icon_com
This post was written by : elayathambi
_95799800_trekker

தாய்வானைச் சேர்ந்த 21 வயதான பயணி ( trekker ) 47 நாட்களின் பின் மீட்கப்பட்டுள்ளார். லியாங்க் செங்க் யுவா என்ற இந்த இளம் பயணியும் இவரது காதலியும் இமாலயப் பயணத்தில் காணாமல் போயிருந்தனர்.

கடல் மட்டத்திலிருந்து 2600 மீட்டர் உயரமான நேபாள நாட்டின்  திப்லிங் கிராமத்தை அண்டிய பகுதிகளில் காணாமல் போன இவ் இருவரையும் தேடி மீட்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது

தேடல் முடிவில் 47 நாட்களின் பின்னர் உயிரோடு இவர் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இவரோடு காணாமல் போன இவரின் 19 வயதான காதலியின் உயிரற்ற உடலே மீட்கப்பட்டிருக்கிறது.

மிக மெதுவாக பேசக் கூடிய நிலையில் லியாங்க் செங்க் யுவா இருப்பதாக இவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர் தெரிவித்துள்ளார். தனது காதலி தான் மீட்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே இறந்து விட்டதாக லியாங்க் செங்க் யுவா தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்டபோது இவரது உடல் நிறை 30 கிலோ குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg