Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு- கிழக்கில் பூரண ஹர்த்தால்: இயல்புநிலை பாதிப்பு

In இலங்கை
Updated: 05:27 GMT, Apr 27, 2017 | Published: 03:32 GMT, Apr 27, 2017 |
0 Comments
1481
icon_com
This post was written by : Risha
harth

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டங்கள் மற்றும் மண்மீட்பு போராட்டங்கள் என்பவற்றிற்கு ஆதரவாக வடக்கு கிழக்கு எங்கும் இன்று (வியாழக்கிழமை) பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், படையினருடைய நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அரச நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கக்கோரி வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

யாழ்.மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் யாழ். நகரே வெறிச்சோடிக் காணப்படுவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன், பேருந்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அலுவலர்களின் வருகை குறைவாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் முழு கதவடைப்பு போராட்டத்தினால் வவுனியா நகரும் முற்றாக முடங்கியுள்ளது. வவுனியா நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வலி சுமந்த பல்வேறு போராட்டங்கள் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு அமைப்புக்களினால் இன்று வியாழக்கிழமை வடக்கு கிழக்கு பகுதிகளில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, வலி சுமந்த போராட்டங்களுக்கு பூரண ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னாரிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம், வர்த்தக சங்கம், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் அழைப்பிற்கிணங்க மன்னாரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதோடு, தனியார் போக்குவரத்துச் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.

வடக்கில் மாத்திரமின்றி கிழக்கு கிழக்கு மாகாணத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுன்றது. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளன.

அந்தவகையில், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

har har1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg