Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சமஷ்டியே சிறந்த தீர்வு: தந்தை செல்வா நினைவுரையில் ராஜித

In இலங்கை
Updated: 06:25 GMT, Apr 27, 2017 | Published: 04:15 GMT, Apr 27, 2017 |
0 Comments
1322
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
rajitha

இந்நாட்டில் வாழும் மூவின மக்களுக்கும் சமஷ்டி என்பது அவசியம் என்றும் தந்தை செல்வா குறிப்பிட்டதைப் போன்று அதிகாரங்கள் பகிரப்பட்டால் மாத்திரமே நாட்டில் சகல இன மக்களும் சிநேகபூர்வமாக வாழலாம் என்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற தந்தை செல்வா நினைவுதின நிகழ்வில் ஆற்றிய நினைவுப் பேருரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

”தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டி தீர்வு யோசனைகள் தோல்வியடைந்ததன் காரணமாகவே, அவர் வேறு தெரிவுகள் இல்லாமல் தமிழீழக் கோரிக்கையை தெரிவு செய்தார். இதற்கு இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளே காரணம். இன்னமும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி நடத்திய கீழ்த்தரமான அரசியல்தான் காரணம். பாரம்பரியமான இடதுசாரி கட்சிகளும்கூட ஆரம்பத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காக பேசினாலும், பின்னர் இனத்துவேச அரசியலிலேயே ஈடுபட்டன.

தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தால் சிங்கள மக்களின் வாக்குகள் குறைந்து விடும் என்று சொல்கின்றார்கள். நான் களுத்துறை மாவட்டத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு போருக்கு எதிராகக் குரல் கொடுத்தேன். அப்போது 70 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. தமிழ் மக்களின் உரிமைக்காக அதன் பின்னர் குரல் கொடுத்தேன். 2010ஆம் ஆண்டு ஒரு இலட்சமாக எனக்குரிய வாக்குகள் அதிகரித்தன. அதன் பின்னர் முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுத்தேன். அதன் பின்னர் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் அதிகமான கிடைத்தன. இதனைச் சிங்களத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சமஷ்டியை தமிழ் மக்கள் கோரி நிற்பதால், அது சிங்கள மக்கள் மத்தியில் தவறான பரப்புரையாக எடுத்துச் சென்றுள்ளது. அதனால் சமஷ்டி என்பது பிரிவினை என்று சிங்கள மக்கள் அஞ்சுகின்றார்கள். இது தொடர்பில் சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதனைச் செய்ய வேண்டும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg