Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தென் கொரியாவில் நிறுவப்படும் அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புக்கு எதிர்ப்பு

In
Published: 04:32 GMT, Apr 27, 2017 |
0 Comments
2202
icon_com
This post was written by : Anojkiyan

வடகொரியாவிடமிருந்து எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் ஒரு முயற்சியாக, தென் கொரியாவின் தென்பகுதியில் உருவாக்கப்படும் அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய ஏவுகணைத் தடுப்பு அமைப்பை நிறுவும் நடவடிக்கைக்கு, உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

நேற்று (புதன்கிழமை) காலை, இராணுவ பாதுகாப்பு சாதனங்களை ஏற்றிய அமெரிக்காவின் நீண்ட இராணுவ ட்ரக்டர்கள், தென் கொரிய தலைநகரில் இருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில், பயன்படுத்தப்படாத கோல்ஃப் மைதானத்துக்கு சென்றடைந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், குறித்த இராணுவ ட்ரக்டர்கள் மீது தண்ணீர் போத்தல்களை வீசி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பாதுகாப்பு சாதனங்களை அங்கிருந்து அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும், தென்கொரியாவின் புதிய அரசு தனது முடிவை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது, தென்கொரியாவின் தென் பகுதியில் அமெரிக்கா நிறுவிவரும் தாட் என்ற ஏவுகணைத் தடுப்பு அமைப்பானது, பொலிஸ்டிக் ரக குறுகிய மற்றும் நடுத்தர ரக ஏவுகணைகள் அதன் கடைசிக் கட்டத்தை அடையும்போது, அவற்றை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg