Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் ஏவுகணை திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தீர்மானம்

In
Updated: 05:58 GMT, Apr 27, 2017 | Published: 04:55 GMT, Apr 27, 2017 |
0 Comments
1743
This post was written by : Anojkiyan

வடகொரியாவுக்கு அமெரிக்காவும் பனிப்போர் இடம்பெற்றுவரும் நிலையில், வட கொரியா மேற்கொண்டு வரும் அணு மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அதற்கு அழுத்தம் தர இராஜ்ஜிய ரீதியான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

செனட் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட ஒரு சிறப்புக்கூட்டத்துக்குப் பின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்த முடிவை அறிவித்தார்.

அமெரிக்காவை போருக்கு வருமாறு வடகொரியா பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள நிலையில், தடைகளை மேலும் இறுக்குவதற்கு அமெரிக்க எடுத்துள்ள இத்திட்டம் குறித்து முழுமையாக விபரிக்கப்படவில்லை.

வடகொரியாவின் செயற்பாட்டினால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா, அணு மற்றும் ஏவுகணைத் திட்டங்களை கைவிடுமாறு வடகொரியாவின் நட்பு நாடான சீனாவிடம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg