Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொடநாடு கொலை தொடர்பான சந்தேகங்களுக்கு அரசு விளக்கமளிக்க வேண்டும்: ஓ.பி.எஸ்

In இந்தியா
Updated: 07:23 GMT, Apr 27, 2017 | Published: 04:47 GMT, Apr 27, 2017 |
0 Comments
1191
This post was written by : Shailu

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு அரசு விளக்கமளிக்க வேண்டும் என தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “முதல்வரின் பங்களாவில் கொலை சம்பவம் இடம்பெற்றுமையானது, அ.தி.மு.க கட்சியினருக்கு மட்டுமன்றி மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை சம்பவத்தால் சட்டம், ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதாகவே மக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகின்றது.

எனவே தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கும், பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பும், இக்கொலைக்கான காரணம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமையும், தமிழக அரசுக்கு இருக்கிறது.

எனவே இந்த விடயத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருக்காமல், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg