Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சத்தீஷ்கரில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை: ரிசர்வ் படையினர் பதிலடி

In இந்தியா
Updated: 06:13 GMT, Apr 27, 2017 | Published: 05:32 GMT, Apr 27, 2017 |
0 Comments
1349
icon_com
This post was written by : Shailu
Naxalites

சத்தீஷ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் (CRPF) மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஷ்கரின் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் நேற்று (புதன்கிழமை) தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மேலும் 5 நக்சலைட்டுகள் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நேற்று முன்தினம் நக்சலைட்டுகள் மேற்கொண்ட தாக்குதலில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்த 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg