Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பந்துவீச்சை தாமதப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அபராதம்

In கிாிக்கட்
Updated: 06:42 GMT, Apr 27, 2017 | Published: 05:42 GMT, Apr 27, 2017 |
0 Comments
1272
This post was written by : Varshini

பந்துவீச்சை தாமதப்படுத்திய குற்றத்திற்காக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில், கிங்ஸ்டனில் நடந்த முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, பந்துவீச்சில் கூடுதலான நேரத்தை எடுத்துக்கொண்டதாக ஐ.சி.சி.யிடம் மைதான நடுவர்கள் முறையிட்டனர்.

குறித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து நடத்திய விசாரணைகளை அடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜோசன் ஹோல்டருக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதமும் வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதமும் ஐ.சி.சி. போட்டி நடுவர் அபராதமாக விதித்துள்ளார்.

இத் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதோடு, இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 30ஆம் திகதி பிரிட்ஜ்டவுனில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg