Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஹர்த்தாலுக்கு ஆதரவு: வட. மாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு

In இலங்கை
Published: 05:44 GMT, Apr 27, 2017 |
0 Comments
1212
icon_com
This post was written by : Risha

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்றைய (வியாழக்கிழமை) வட. மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் நில மீட்புக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் வலி சுமந்த பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்றைய தினம் காலை நடைபெறவிருந்த வட. மாகாண சபையின் 91ஆவது அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலை சபை கூடியபோது, வடக்கு – கிழக்கில் தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிவரும் மக்களுக்கு வலு சேர்க்கும் வகையில் நடைபெறும் பூரண ஹர்த்தாலுக்கு  வட. மாகாணசபை தமது பூரண ஒத்துழைப்பை வழங்குகிறது எனத் தெரிவித்த அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், முதலமைச்சரின் கருத்தின் பின்னர் அமர்வு ஒத்திவைக்கப்படும் என்று கூறியுள்ளார். அதன்படி சபை அமர்வுகள் எதிர்வரும் மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg