Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரேஸிலில் அரசியல்வாதிகளை விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்

In உலகம்
Updated: 07:18 GMT, Apr 27, 2017 | Published: 06:44 GMT, Apr 27, 2017 |
0 Comments
1260
This post was written by : Anojkiyan

பிரேஸிலில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளை விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு, கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சட்டமூலத்திற்கு செனட் சபை உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

விசாரணை நடத்தக்கூடிய அதிகாரம் படைத்த அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, ஊழல் குற்றச்சாட்டுக்களில் அதிகம் தொடர்புடையதாக கூறப்படும் அந்நாட்டு செனட் உறுப்பினர்கள் 54-19 என்ற கணக்கில் சட்ட தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

பிரேஸில் உச்சநீதிமன்றம், 98 அரசியல்வாதிகளுக்கு எதிராக ஊழல் விசாரணையை ஆரம்பித்துள்ளது. அரசியல்வாதிகள் பில்லியன் டொலர்களில் லஞ்சம் பெற்றுள்ளதும் குறிப்பாக நாட்டின் எண்ணெய் நிறுவனமான பெட்ரோபாஸூடன் தொடர்புடைய திட்டங்களுக்காக இத்தொகை கொடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக இவ்விடயம் நடந்துள்ளதாகவும் இதில் குறைந்தது 24 செனட்டர்களும் அடங்குவர் என்றும் தெரிகிறது.

பிரேஸில் வரலாற்றில் இவ்வாறானதொரு விசாரணை நடைபெறுவதே இதுவே முதல் தடவையாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg