Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

யாழ். வீதிகளை உலகத் தரத்தில் மேம்படுத்த இந்திய அரசு ஒத்துழைப்பு!

In இலங்கை
Updated: 07:16 GMT, Apr 27, 2017 | Published: 06:41 GMT, Apr 27, 2017 |
0 Comments
1272
icon_com
This post was written by : Risha
Nitin Gadkari meets Ranil Wickremesinghe_TFM_166062

யாழ்ப்பாணத்திலுள்ள வீதிகளை உலகத் தரத்தில் மேம்படுத்துவதற்கு இந்திய அரசு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என இந்திய மத்திய வீதி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்  டெல்லியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பின்போது, யாழ்ப்பாணப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு வீதிகளை மேம்படுத்தப்படுவது அவசியம் என சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில், யாழ்ப்பாணம் முதல் மன்னார், மன்னார் முதல் வவுனியா, தம்புள்ளை முதல் திருகோணமலை வரையான முக்கிய வீதிகளை இந்திய அரசு மேம்படுத்தித் தரவேண்டும் என கோரியுள்ளார்.

பிரதமரின் கோரிக்கைக்கு அமைய யாழ். பிராந்தியத்தில் வீதி உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தித் தருவதற்கு இந்திய அரசினால் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg