Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

In கிாிக்கட்
Updated: 07:25 GMT, Apr 27, 2017 | Published: 07:06 GMT, Apr 27, 2017 |
0 Comments
1371
This post was written by : Surenth

நிர்வாக அமைப்பில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதுடன் வருவாய் பகிர்விலும் திருத்தங்களை மேற்கொள்ள சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

டுபாயில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபை நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த புதிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, நிர்வாக சீர்திருத்தத்துக்கு இந்திய கிரிக்கெட் சபை மாத்திரமே எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இதற்கு 9 நாடுகள் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.

இதேபோல, வருவாய் பகிர்வு சீர்திருத்தத்திற்கு இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைகள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. ஏனைய 8 நாடுகளும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

இதன்காரணமாக சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிமுறை திருத்தம் திட்டமிட்டபடி நிறைவேறியுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் சபைக்கு பாரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg